"பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள்" - கெஜ்ரிவால் ஆவேசம்!

 
கெஜ்ரிவால்

மத்திய அரசு E20 எரிபொருள் குறித்த தெளிவான விளக்கங்களை அளிக்கும் வரை பொதுமக்கள் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

E20 (20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்) எரிபொருளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு முறையான அறிவியல் ஆராய்ச்சிகளையோ அல்லது பொறியியல் சான்றுகளையோ வெளியிடாமல் கட்டாயப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பழைய வாகனங்களின் எஞ்சின் பாகங்கள் இதனால் பாதிப்படைகின்றனவா என்பது குறித்த தெளிவான விவரங்களை அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

E20 பெட்ரோல்

பெட்ரோல் பங்குகளில் தூய்மையான பெட்ரோல் மற்றும் E20 பெட்ரோல் ஆகிய இரண்டையும் மக்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யும் வகையில் தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டும்.

எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலின் விலையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹84-க்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.