ஹஜ் யாத்திரை பெயரில் பிச்சைக்காரங்கள் அனுப்பாதீங்க... பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கோரிக்கை!

 
ஹஜ்

ஹஜ் யாத்திரை என்கிற பெயரில், பாகிஸ்தானில் இருந்து பிச்சைக்காரர்களை அனுப்புவதை நிறுத்துங்க என்று பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், புனித யாத்திரை செல்ல அனுமதி பெற்று, பல பாகிஸ்தானியர்கள் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹஜ்

இதன் மூலம் ஹஜ் புனித யாத்திரை என்ற பெயரில் பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு எமிரேட்ஸ் கைது செய்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புனித யாத்திரை விசாவின் கீழ் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திடம் சவுதி வராஜ் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. மத யாத்திரை என்ற போர்வையில் சவூதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறு பாகிஸ்தான் அரசை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web