பெற்றோர்களே உஷார்... 4 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய் ...வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த போது பெரும் சோகம் !
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் நிஷாந்தை தெருநாய் ஒன்று எதிர்பாராதவிதமாக கடித்துக் குதறியது. இந்த கோரச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், உடனடியாக மீட்கப்பட்டுத் தகுந்த சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குக்கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்களும் சிறுவர்களும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வீட்டின் முன்பு விளையாடும் குழந்தைகளைக் கூட நாய்கள் துரத்தித் கடிக்கும் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திட உரிய அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் சிறுவன் நிஷாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
