எம்.பி.பி.எஸ் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

 
மருத்துவர்கள் மருத்துவர் டாக்டர்

எம்.பி.பி.எஸ் மாணவர்களிடம் விதிகளுக்கு மாறாக நான்கரை ஆண்டுகளுக்கு மேல் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி, பல கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை பொருந்தா நிபந்தனைகள் பாதிக்க கூடாது! – டாக்டர் ராமதாஸ் 

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவப் படிப்பின் நான்கரை ஆண்டு கல்விக்குப் பிறகுள்ள கூடுதல் காலத்திற்கும் சேர்த்துச் சில கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக 11 புகார்கள் பெறப்பட்டுள்ளன. எனினும், மாணவர்கள் தரப்பில் கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

MBBS  BDS மருத்துவக் கலந்தாய்வு டாக்டர் மருத்துவர் நீட்

ஆவணங்கள் இல்லாத நிலையிலும், இந்தப் புகார்களின் அடிப்படையில் விதிகளை மீறி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது உறுதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சட்டமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.