வலுக்கும் எதிர்ப்புகள்... பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் - இன்று மீனவர்கள் அவசர ஆலோசனை!

 
பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தவெக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மீனவ கிராமங்கள் தரப்பில் தீவிர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் எழுப்புவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெரினா பட்டினப்பாக்கம்

அரசின் இந்தத் திட்டத்திற்கு இப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கம்

இந்தப் புதிய கட்டுமானத்தால் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் எனக் கூறப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.