முதல்வரின் வருகையையொட்டி மாணவர்களின் புத்தகப் பைகள் ஸ்கேனர் மூலம் சோதனை - பலத்த பாதுகாப்பு!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கும் நிகழ்வை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் சென்னை திருவான்மியூர் பகுதி பலத்த காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் விஜய் நேரில் தொடங்கி வைக்கிறார்.

விழா நடைபெறும் சென்னை திருவான்மியூர் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதுமாக அரசின் தீவிர கண்காணிப்பு வளைகுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மாணவ-மாணவிகளின் புத்தகப் பைகள் அதிநவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் தீவிரமாகச் சோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
