நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

 
பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வு மற்றும் NEET நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக கோட்டாவில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் அன்னுபூர் பகுதியை சேர்ந்த விவேக் குமார் என்ற 18 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்தார்.

நீட்

இவர் கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள விடுதியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு விவேக்குமார் விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள், பலத்த காயமடைந்த விவேக்குமாரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவேக்குமார் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விவேக் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் கோட்டாவில் நடந்த 16வது தற்கொலை சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கோச்சிங் சென்டர்களில் மாணவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது, விடுதிகளின் பால்கனிகளில் பாதுகாப்பு வலைகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் குறித்த விடுதியின் பால்கனியில் இருந்த பாதுகாப்பு வலை சேதமடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web