நாப்கின் கேட்டதற்காக மாணவியை வகுப்பு வெளியே நிற்க வைத்த கொடூரம்.. பள்ளி முதல்வர் வெறிச்செயல்!

உத்தரபிரதேசத்தில், மாதவிடாய் காலத்தில் பள்ளிக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி சானிட்டரி நாப்கின் கேட்டதற்காக வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பரேலியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவி, மாதவிடாய் காலத்தில் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார்.
அந்த நேரத்தில், அந்த மாணவிக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வரிடம் சானிட்டரி நாப்கின் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி முதல்வர் மாணவிக்கு நாப்கின் கொடுக்கவில்லை என்றும், வகுப்பறைக்கு வெளியே நிற்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மாணவி சுமார் ஒரு மணி நேரம் வகுப்பிற்கு வெளியே நின்றார்.
சம்பவம் குறித்து அறிந்ததும், மாணவியின் தந்தை மாவட்ட நீதிபதி, மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர், மாநில மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் நலத்துறையிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!