மாணவி பாலியல் படுகொலை வழக்கு.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
வேடநத்தம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 11-ம் தேதி மாயமான மாணவியைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் ஆய்வாளர் பிரவீனா, புகாரை முறையாக விசாரணை செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் இந்த அலட்சியமே மாணவியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பெற்றோரை அலட்சியப்படுத்தியது மற்றும் கடமை தவறியது தொடர்பான புகார்களின் அடிப்படையில், நெல்லை சரக டிஐஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
