பெரும் சோகம்!! நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை!!

 
ஜெகதீஸ்வரன்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வருபவர்   செல்வம். போட்டோகிராபராக பணிபுரிந்து வரும் இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் . சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு படித்த இவருடைய மகன்  பொதுத்தேர்வில் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.  மருத்துவ படிப்பு தான் படிக்க வேண்டும் என லட்சியத்துடன் படித்து வந்தார். இதனால்  2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். ஆனாலும்   3வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம் நம்பிக்கை தெரிவித்தார்.  

ஜெகதீஸ்வரன்

இதனையடுத்து நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டியாகிவிட்டது.   இந்நிலையில் நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதில்   2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துவிட்டனர். ஏற்கனவே உடன் படித்த  நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்து வந்தார்.   விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து   வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.  இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஆம்புலன்ஸ்

மகன் இறந்தது முதலே யாருடனும் பேசவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். அவர்  இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி  பிரேதபரிசோதனைக்காக  தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web