பெற்றோர்கள் கதறல்... பள்ளியில் கள்ளிப்பால் குடித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
கள்ளிப்பால்
 

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் குணமங்கலம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 84 மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில்  தான் இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் கள்ளிப்பால் கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய பாலை சுவைத்துள்ளனர்.
 மருத்துவமனை

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் பணியில்ல இருந்தார். அவரிடம் கள்ளிப்பால் குடித்ததை குறித்து மாணவர்கள் கூறியதை அடுத்து 5 பேரையும் குணமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதல் உதவி அளித்தார்.

ஆம்புலன்ஸ்

பின்னர், 108 அவசர ஊர்தி மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.