மாணவர்கள் உற்சாகம் ... 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த கேள்விக்கு கருணை மதிப்பெண் !

 
நுழைவு தேர்வு

தமிழகத்தில் மாநில கல்வி திட்டத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச்  27ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும்  7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 823261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.  இதனையடுத்து 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 04-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 தேர்வு
இந்நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் 11ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குஷியை எற்படுத்தியுள்ளது.  மே 19ம் தேதி 11ம் வகுப்பு முடிவுகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 
ஏற்கனவே 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் 4 வது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!