மாணவர்கள் 14 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் - அரசுப் பணிகளுக்கான வினாத்தாள் கசிவு; ஜார்க்கண்டில் பரபரப்பு!

 
நீட் ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்து, அம்மாநில மாணவர்கள் தொடர்ந்து 13-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கோரி, கடந்த ஜூலை 25-ம் தேதி முதல் மாணவர்கள் இப்போராட்டத்தைத் தொடங்கினர். இந்தத் தேர்வு முறைகேடு தொடர்பாக உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை தேவை: முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்குக் காரணமான நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.