குஷியில் மாணவர்கள்... செப்டம்பரில் 3 நாட்கள் தொடர் விடுமுறை.. இப்பவே ப்ளாண் பண்ணுங்க!
Aug 27, 2026, 15:40 IST
செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலரும் குடும்பத்துடன் வெளியூர் செல்லவும், சுற்றுலா மற்றும் கோயில் பயணங்களை மேற்கொள்ளவும் முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
