குஷியில் மாணவர்கள்.. 9 நாட்கள் காலாண்டு விடுமுறை.. இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான 2026–2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 5-ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் குடும்பங்கள் தங்களின் பயணத் திட்டங்களை முன்னதாகவே செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுமுறை நாட்களில் அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணச் சீட்டு கிடைக்காமல் சிரமப்படுவதைத் தவிர்க்கவும் அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளம் (TNSTC) அல்லது ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) மூலம் பயணச் சீட்டுகளை (Tickets) இப்போதே முன்பதிவு செய்துகொள்வது சிறந்தது.
