குஷியில் மாணவர்கள்... அண்ணா பல்கலையில முதுகலை படித்தால் செமஸ்டருக்கு ரூ.60,000 உதவித்தொகை!

 
அண்ணா பல்கலைக் கழகம் அண்ணா பல்கலைக் கழகம்

தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செமஸ்டர் ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கும் புதிய கல்வி உதவித்தொகை திட்டம் 2026-27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 60,000 வழங்கப்படும். இது மாதந்தோறும் ரூ. 12,400 பெறுவதற்கு இணையான ஒரு பெரிய தொகையாகும்.

அண்ணா பல்கலைக்கழகம்

இரண்டு ஆண்டு முதுகலை படிப்பை முடிக்கும் வரை இந்த நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும். முதற்கட்டமாகத் தகுதியுள்ள 400 மாணவர்கள் இந்த உதவித்தொகை பெறத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திறமையான மாணவர்கள் நிதி நெருக்கடியால் உயர்கல்வியைத் தள்ளிப் போடக்கூடாது என்பதற்காகவும், ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் முதுகலை கனவு எளிதில் நனவாகும் சூழல் உருவாகியுள்ளது.