குஷியில் மாணவர்கள்... ஏப்.16 முதல் கோடை விடுமுறை.. வாக்குப்பதிவுக்கு தயாராகும் வகுப்பறைகள்!

 
விடுமுறை விடுமுறை

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை மற்றும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ந் இலையில், ஏப்.16ம் தேதி முதலே மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவங்குகிறது. 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை: மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெறும்.

தேர்வு

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெறும். 12-ஆம் வகுப்பு: மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 11-ஆம் வகுப்பு: மார்ச் முதல் மார்ச் 27 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 10-ஆம் வகுப்பு: மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேர்வு மாணவிகள்

தேர்வுகள் முடிந்தவுடன், ஏப்ரல் 16 முதல் மே 31-ஆம் தேதி வரை மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெறுவதால், ஒரு வாரத்திற்கு முன்பே (தேர்வுகள் முடிந்தவுடன்) அனைத்துப் பள்ளிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.