குஷியில் மாணவர்கள்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 4 மாவட்டங்களில் கொண்டாட்டம்!
இன்று ஆகஸ்ட் 3ம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் , ஆடி 18ப்பெருக்கு, வல்வில் ஓரி திருவிழா என 4 மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் துவங்கியிருக்கிறது. ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் திருப்பூர், சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஒட்டி, குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று இயங்காது. எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும்.

இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலையின் நினைவு நாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
