பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

 
பெல்ஜியம் மாணவர்கள் போராட்டம்

பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் தீவிர போராட்டம்: வகுப்பறைகளில் இடப்பற்றாக்குறையைக் கண்டித்து ஆவேசம்!பெல்ஜிய நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், கல்வி உள்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

பெல்ஜியத்தில் ஆண்டுக் கல்விக் கட்டணம் முந்தைய 835 யூரோவில் இருந்து 1,194 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கல்விக் கட்டண உயர்வுக்கு அப்பால், வகுப்பறைகளில் நிலவும் கடும் இடப்பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாகச் சில மாணவர்கள் பள்ளி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தும், முக்கிய சாலைகளை மறித்தும் தங்களது எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்தனர்.