மாணவர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை.. 3 திங்கள்கிழமைகளில் அரசு விடுமுறை.. இப்பவே ப்ளாண் பண்ணிக்கோங்க!
Aug 21, 2026, 19:00 IST
நடப்பு 2026-27-ஆம் கல்வியாண்டில் மூன்று அரசு விடுமுறை நாட்கள் திங்கள்கிழமைகளில் வருவதால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வார இறுதி நாட்களுடன் சேர்ந்து தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளன.
விநாயகர் சதுர்த்தி: செப்டம்பர் 14 (திங்கள்கிழமை), சரஸ்வதி பூஜை: அக்டோபர் 19 (திங்கள்கிழமை), மகாவீர் ஜெயந்தி: ஏப்ரல் 19 (திங்கள்கிழமை) என மூன்று திங்கட்கிழைகள் அரசு விடுமுறை தினங்களாக அமைந்திருக்கிறது.

திங்கள்கிழமைகளில் அரசு விடுமுறை வருவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
குறிப்பாக, அக்டோபர் 19 திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறையைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளான செவ்வாய்க்கிழமையும் விஜயதசமி அரசு விடுமுறை என்பதால், அந்த வாரத்தில் மாணவர்களுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் நீண்ட விடுமுறை அமையவுள்ளது.
