ஆயுர்வேதம் படித்து ஆங்கில மருத்துவம்.. போலி பெண் மருத்துவர் அதிரடியாக கைது!

 
சவுத்ரி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் ஆயுர்வேதம் படித்து ஆங்கில மருத்துவம் செய்து வந்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் ஆஷிகா என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ​​மருத்துவமனையில் ஆயுர்வேத இளங்கலை படித்த பெண் மருத்துவர் சவுத்ரி (40) என்பவர் நோயாளிக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண் மருத்துவர் சவுத்ரியை அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைது

முன்னதாக, ஆயுர்வேதம் படித்து அலோபதி மருத்துவம் செய்து வந்த மருத்துவர் சவுத்ரி மீது வேப்பனஹள்ளி மாவட்ட மருத்துவர் சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web