அடுத்தடுத்து தாக்குதல்... தொடரும் பதற்றம்... சவுதி அரேபியாவுக்கு விமான சேவைகள் ரத்து!

 
ஏர் இந்தியா விமானம்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மம் ஆகிய நகரங்களுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இண்டிகோ

அக்டோபர் 9 முதல் அக்டோபர் 25 வரை பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள், நவம்பர் 10-ஆம் தேதி வரை கட்டணமின்றி ஒருமுறை பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்து முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

சவுதி

தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களை சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளன.