அடுத்தடுத்து திருப்பம்... இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறர் அண்ணாமலை!

 
அண்ணாமலை அண்ணாமலை

பாஜக தேசியத் தலைமைக்கும் தமக்கும் இடையே நீடித்து வந்த கடுமையான அரசியல் கொள்கை முரண்பாடுகள் காரணமாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழகத்தின் முன்னணி இளம் தலைவருமான கே. அண்ணாமலை தனது பாஜாக அடிப்படை உறுப்பினர் பதவியையும், அனைத்துப் பொறுப்புகளையும் அதிகாரப்பூர்வமாகத் தற்பொழுது ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, தனது இறுதி அரசியல் விடைபெறுதலாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த ஜூன் 2 ம தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு பாஜாக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை அடுத்தடுத்து நேரில் சந்தித்துத் தனது விலகல் கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்துள்ளார்.

பாஜாக தேசியத் தலைவர்கள் அண்ணாமலையைத் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பலமுறை வலியுறுத்தியும், அவர் தனது பாஜாகவிலிருந்து விலகும் முடிவில் மிகவும் உறுதியாக இருந்ததாகத் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை

டெல்லி பயணத்தின் இறுதிப் பகுதியாக, இன்று தனது பிறந்தநாளையொட்டிப் பிரதமர் மோடியைச் சந்தித்து ஆசி பெறுவதோடு, தான் பாஜாகவிலிருந்து விலக நேரிட்டதற்கான முழுமையான காரணங்கள் அடங்கிய தேர்தல் ஆய்வு அறிக்கையையும் அவரிடம் அண்ணாமலை நேரில் வழங்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சந்திப்பை முடித்துக் கொண்டு நாளை அவர் தமிழ்நாடு திரும்புகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, அண்ணாமலையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி டெல்லி தலைமை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்ததுதான் இந்த விரிசலுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் நிபந்தனைகளுக்கு இணங்கி அண்ணாமலையைத் தேர்தல் பணிகளில் இருந்து பாஜாக தலைமை ஓரங்கட்டியது. மேலும், கோயம்புத்தூர் உள்ளிட்ட அவர் விரும்பிய தொகுதிகளில் போட்டியிட அவருக்கு வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன.

அண்ணாமலை

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கொண்டு வந்த கட்டாய முப்பரிமாண மொழிப் பாதுகாப்புக் கொள்கையை அண்ணாமலை பகிரங்கமாக எதிர்த்த போதே, அவர் பாஜாகவிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. பாஜாகவிலிருந்து வெளியேறியுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி, தேசியப் பார்வையுடன் கூடிய ஒரு புதிய "மதச்சார்பற்ற பிராந்தியக் கட்சியை" இன்னும் சில மாதங்களில் அவர் முறைப்படி தொடங்கவுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தற்போதைக்கு 'திராவிடம் 2.0' என்ற கோட்பாட்டில் அவர் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க ஒரு பெரிய சமூக அமைப்பை அல்லது இயக்கத்தை அவர் விரைவில் தமிழ்நாட்டில் அறிவிக்கவுள்ளார்.