எக்கச்செக்க காதலிகளால் தொல்லை... கல்லூரி மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

 
பள்ளி காதல்

எக்கச்சக்க காதலிகளால் கல்லூரி மாணவர் ஒருவர் தவித்து வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறார். சீனாவில் ஒரு கல்லூரி மாணவருக்கு ஒரு விசித்திரமான நோய் உள்ளது. அந்த நபர் தான் மட்டும் தான் மிகவும் அழகாக இருப்பதாக நினைத்து வாழ்ந்து வருகிறார். எல்லா பெண்களும் தன்னை காதலிப்பதாகவும் நினைத்துள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயது மாணவரான லியு, பல்கலைக்கழகத்தில் தான் மிகவும் அழகான மனிதர் என்றும், அங்குள்ள பெண்கள் தன்னை விரும்புவதாகவும் நினைத்தார்.

இந்த விசித்திரமான காதல் நோய் (Delusional Love Disorder) அறிகுறி முற்றி, கடந்த பிப்ரவரி மாதம் மாணவி ஒருவரிடம் சென்று காதல் வார்த்தைகளை பேச ஆரம்பித்துள்ளார். இந்த விசித்திரமான நோய் மாணவனுக்கு மிகவும் கடுமையானதாகிவிட்டது, அந்த பெண் உடனடியாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நோயின் தீவிரத்தால், இந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து மனதை அமைதியடைய செய்துள்ளார்.

நோய் தீவிரமடைந்ததால், மாணவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும் எல்லாப் பெண்களும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். லியு பல்கலைக்கழகத்தில் சிறந்த தோற்றமுள்ள மாணவர் என்று நினைக்கிறார். இதனால், அவரது பள்ளித் தோழர்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது, பணத்தை வீண் செலவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை லியு சந்தித்துள்ளார். அப்படிப்பட்ட விசித்திரமான காதல் நோயால் பாதிக்கப்பட்ட லியு என்ற மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web