இன்று நள்ளிரவு முதல்... சமூக வலைதளங்களுக்கு 90 நாட்கள் தடை!
சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் பல தெற்கு சூடான் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள சூறையாடப்பட்டன. இதன்பிறகு ஜனவரி 17ம் தேதியன்று தெற்கு சூடானில் ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர். இதனையடுத்து சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தி அந்நாட்டு தேசிய தொடர்பு ஆணையம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி இந்த தற்காலிகத் தடை உத்தரவு 90 நாட்கள் வரை அமலில் இருக்கும் எனவும், இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும், நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
