சூடானில் டிரோன் தாக்குதல்: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு!

 
விமானம்

 

சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய அபியேய் பகுதியில் உள்ள அமியெட் சந்தை மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், சந்தைக்கு அருகே இருந்த எரிபொருள் சேமிப்பு இடம் பாதிக்கப்பட்டு தீ பரவியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் என அபியேய் பகுதி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தெற்கு சூடான் அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதலின் பொறுப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் நிலை குறித்த அனைத்து விவரங்களும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Sudan drone strike kills around 150 in Abyei market | Webdunia English

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸுக்கும் (RSF) இடையே 2023 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கவலையாகியுள்ளது.