சூடானில் தீவிரமடைந்த உள்நாட்டு போர்.. 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்.. ஐ.நா கவலை!

 
சூடான்

சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாடு பேரிழப்புகளை சந்தித்து வருகிறது. முக்கியமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி கிட்டக்கிறது. இந்த நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்தப் போரில் இதுவரை 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் தொடரும் கலவரங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் மாதங்களில் சுமார் 222,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் எச்சரித்துள்ளது. எனவே, சூடானுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குமாறு உலக நாடுகளை ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web