தமிழகத்தில் பள்ளி விடுமுறையில் திடீர் மாற்றம்.. லீவுக்கு ஊருக்கு செல்லபவர்கள் தேதியை சரிபார்த்துக்கோங்க!

 
விடுமுறை

கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், ரயில் டிக்கெட் முதலானவைகளை புக் செய்திருப்பவர்கள், உங்கள் மகன், மகளின் தேர்வு அட்டவணையை ஒரு  முறை சரிபார்த்துக்கோங்க. ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கு  முன்பாகவே தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதே சமயம் ரமலான் விடுமுறை தேதியில் மாற்றம் இருப்பதால், முழு ஆண்டு தேர்வு அட்டவணை மாறுதலடைகிறது. 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

ஏப்ரல் 19ம் தேதிக்கு பின்னர் நீங்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் பரவாயில்லை. அதற்கு  முன்பு திட்டமிட்டிருந்தால், தேர்வு அட்டவணையை பள்ளியில் சரிபார்த்துக் கொள்ளுங்க. 9ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க  வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அவை பரிசீலிக்கப்பட்டு தேர்வு கால அட்டவனையில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

பேருந்து

தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024ம் தேதிக்கும் 12.04.2024 ம் தேதி நடைபெறுவதாக இருந்த  சமூக அறிவியல் தேர்வு 23.04.2024ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி   தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல்கள் சீரிய முறையில் வழங்கப்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web