வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சவாரி சேவை திடீர் நிறுத்தம் - சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

 
வண்டலூர் பூங்கா

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை நேரில் பார்வையிடும் வாகனச் சவாரி வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு இந்தச் சேவை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுவதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிர்ச்சி! வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஷ்மர் வெள்ளை புலி உயிரிழப்பு!

பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், வழக்கம் போலச் சவாரி சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.