திடீரென பிரசவ வலி.. ஓடும் ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பெரிய கூடந்துறை பகுதியை சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் புனிதா, டிரைவர் பாலமுருகன் ஆகியோர் கர்ப்பிணியை தூக்கிக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கர்ப்பிணி ஜெயந்தி வலியால் துடித்தபோது, ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி, மருத்துவ உதவியாளர் புனிதா, ஆம்புலன்சிலேயே ஜெயந்திக்கு பிரசவம் பார்த்தார் . இந்த பிரசவத்தில் ஜெயந்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா