2 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்... புதிய தலைமை செயலாளர் முதல் உத்தரவு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளார். தமிழகத்தின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பொது நூலகத்துறை இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளார்.

அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலின் இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்ற நிலையில் முதல் உத்தரவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவ்தாஸ் மீனா, 2017ல் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். பின்னர் வீட்டு வசதித் துறை கூடுதல் செயலாளராகவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 2021 ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தமிழகப் பணிக்கு அழைத்துவரப்பட்ட சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பணிஓய்வு பெற்றதை அடுத்து 2023 ஜுன் மாதம் தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
