திடீர் திருப்பம்... எ.வ.வேலுவுடன் திருமாவளவன் ரகசிய சந்திப்பு - ஆழ்வார்பேட்டையில் ஆலோசனை!

 
திருமா விஜய் திருமா விஜய்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்ட தவெக தலைவர் விஜய், திருமாவளவனுக்கு 'துணை முதல்வர்' பதவி வரை ஆஃபர் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், திமுகவின் முக்கியத் தூணாகக் கருதப்படும் எ.வ.வேலுவை திருமாவளவன் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளது தவெக முகாமை அதிர வைத்துள்ளது. இந்தச் சந்திப்பு மிகவும் திட்டமிட்டு ரகசியமாக அரங்கேறியுள்ளது.

இன்று காலை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட திருமாவளவன், பாதியிலேயே தனது பாதுகாப்பு வாகனங்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். அதன் பிறகு, யாருக்கும் தெரியாமல் திமுக முன்னனி நிர்வாகி எ.வ.வேலுவின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்குச் சென்று அவருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக இன்று மாலைக்குள் முடிவு எடுக்க இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

விஜய் திருமா

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. எஞ்சியிருக்கும் விசிக-வும் வெளியேறினால் திமுக கூட்டணி முற்றிலுமாகச் சிதைந்துவிடும். இதைக் கருத்தில் கொண்டு, திருமாவளவனைச் சமாதானப்படுத்தவும், திமுக தரப்பிலிருந்து புதிய வாக்குறுதிகளை அளிக்கவும் எ.வ.வேலு தூது அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறுவது  ஒரு வகையான பில்டப் மட்டுமே...  திருமா விளாசல்!

விஜய் கொடுத்த 'துணை முதல்வர்' ஆஃபர் ஒருபுறம், திமுக-வின் சமாதானப் பேச்சு மறுபுறம் எனத் திருமாவளவன் தற்பொழுது இருமுனை அழுத்தத்தில் உள்ளார். எ.வ.வேலுவுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.