திடீர் திருப்பம்... கணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி... கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடியது அம்பலம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு ஜூஸில் விஷம் கலந்துக் கொடுத்துக் கொலை செய்த மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த மகேஷ் (27) என்பவரின் மனைவி கவிதா மீனா (23). கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் மகேஷைக் கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, 'செல்ஃபோஸ்' என்ற ஆபத்தான விஷ மாத்திரையை ஜூஸில் கலந்து மகேஷிற்குக் கவிதா கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறிது நேரத்திலேயே மகேஷின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொலையை மூடிமறைக்க நினைத்த கவிதா, மகேஷின் உடல்நிலை திடீரென மோசமடைந்துவிட்டதாக நாடகமாடி, அவரது சகோதரர் மணீஷிற்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக மகேஷைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இது இயற்கையான மரணம் என நம்பப்பட்ட நிலையில், மகேஷின் தந்தை பாபுலால், ஆகஸ்ட் 16ம் தேதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையின் போது கவிதா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்த ஜெய்ப்பூர் மேற்கு துணை ஆணையர் பிரசாந்த் கிரண் தலைமையிலான போலீசார், கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
