திடீர் ட்விஸ்ட்.. கிருஷ்ணசாமி தனித்து போட்டி.. 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி, தற்போது அக்கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது கிருஷ்ணசாமி முன்வைத்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, "கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை நான் இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால், இப்போது எடப்பாடி பழனிசாமி அப்படி ஒரு சந்திப்பே நடக்காதது போலவும், எதுவுமே தெரியாதது போலவும் பேசி வருகிறார். அவர் ஏன் உண்மையை மறைக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்."

கிருஷ்ணசாமி

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் அதிகாரப் பங்கீடு ஆகியவற்றில் உடன்பாடு எட்டப்படாததால், தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் 43 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை அவர் வெளியிட்டார். இதில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், ஷியாம் கிருஷ்ணசாமி (மகன்)  ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நெல்லை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

எஞ்சிய தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட  வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைப் பெற்றுள்ள ஒரு கட்சி. அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது 12-15 தொகுதிகள் வரை கிருஷ்ணசாமி கேட்டதாகவும், ஆனால் அதிமுக 5 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இழுபறியே தற்போது தனித்துப் போட்டி என்ற முடிவுக்குக் காரணமாகியுள்ளது.