திடீர் திருப்பம்... நூடுல்ஸ் சாப்பிட்டு 5 பேர் பலியான வழக்கில் நாத்தனார் விஷம் கலந்தது அம்பலம்!
Oct 18, 2026, 18:00 IST
உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா அருகே நக்லா ஸ்ரீபதம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (37), அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு தூங்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருமே இறந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இது சாதாரண உணவு நஞ்சானதால் ஏற்பட்ட மரணம் கிடையாது என்றும், நூடுல்ஸில் விஷம் திட்டமிட்டு கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.

சொத்துத் தகராறு காரணமாக மகேஷே உணவில் விஷம் கலந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு நாத்தனாரே விஷம் வைத்து அவர்களைக் கொன்றது தற்போது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
