தண்டவாளத்தில் திடீரென வந்த கன்றுக்குட்டி.. லோகோ பைலட் செய்த நெகிழ்ச்சி செயல்!

 
கன்றுக்குட்டி 

ஒரு வைரலான வீடியோவில், ஒரு ரயில் தண்டவாளத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ​​தூரத்தில் ஒரு கன்றுக்குட்டி தண்டவாளத்தில் வருகிறது. இதை லோகோ பைலட் பார்த்தார். உடனேகன்றுக்குட்டியை காப்பாற்ற முடிவு செய்து ரயிலின் வேகத்தைக் குறைத்து அலாரம் அடிக்கிறார். ஆனால் கண்றுக்குட்டி ரயில் தண்டவாளத்தை விட்டு செல்லவில்லை.


இதைப் பார்த்த லோகோ பைலட் கண்றுக்குட்டிக்காக ரயிலை ஓரிடத்தில் நிறுத்தினார். பின்னர் கன்றுக்குட்டி தண்டவாளத்தை விட்டு வெளியேறியது. லோகோ பைலட் நினைத்திருந்தால் ரயிலை வேகமாக இயக்கியிருக்கலாம்.   ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. லோகோ பைலட்டின் இந்த மனிதாபிமான செயலால் ஒரு கன்றுக்குட்டி காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கன்றுக்குட்டியின் உயிரை காப்பாற்றியதற்காக அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ரயில் தண்டவாளத்தால் கொல்லப்படும் விலங்குகளில் மாடுகள் மற்றும் யானைகள் மிகவும் பொதுவானவை. சமீபத்தில், வனப்பகுதிக்குள் நுழைந்த யானை ரயிலில் அடிபட்டு இறந்த வீடியோ, பார்ப்பவர்களை நெஞ்சை பதற வைத்தது. மற்றொரு விபத்து வீடியோவில், யானை பலத்த காயம் அடைந்து கால்களை இழந்தது. இதற்கு நடுவே, கண்றுக்குட்டி ரயில் தண்டவாளத்தில் நின்ற நிலையில், லோகோ பைலட்டின் கனிவான இதயத்தால் காப்பாற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!