இதென்னடா புது பிரச்சினை?! திடீரென வீட்டிற்குள் புகுந்து பொருட்களை எடுத்து வெளியே வீசிய வட மாநில இளைஞர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 2வது அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயன்(64). ஓய்வு பெற்ற வானிலை ஆய்வாளர். இவர், நேற்று இரவு 8 மணியளவில் தனது மனைவியுடன் வீட்டின் முதல் தளத்தில் இருந்தார். அப்போது அந்த தெருவில் வடமாநில வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சிறிது நேரம் அமைதிக்கு பிறகு விஜயன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தனர்.அப்போது விஜயன் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த வெளிமாநில நபரை வீட்டிற்குள் வைத்து வெளி தாப்பாள் போட்டனர்.அப்போது அந்த நபர் வீட்டுக்குள் இருந்து பொருட்களை எடுத்து வீசுவதும் வெளியே இருந்தவர்களை ஆக்ரோஷமாக திட்டுவதுமாக இருந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் 6 போலீசார் அந்த நபரை பிடிக்க விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த நபர் வீட்டின் உள்ளே தாள் போட்டுக் கொண்டார். இதனால் அந்த நபரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் வடமொழி தெரிந்த போலீசார் ஒருவரை அழைத்து அந்த நபரிடம் பேசி வெளியே வர வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த நபர் மிரண்டு போய் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வீசுவதும், கண்ணாடியை உடைத்தும் தன்னை காயப்படுத்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து அந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்றனர். மேலும் அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர். வெளி மாநில நபர் அட்டகாசம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
