ரூ.8 கோடியில் சர்க்கரை ஆலைகள் நவீனப்படுத்தப்படும் - அமைச்சர் வினோத் அறிவிப்பு!
Aug 31, 2026, 12:51 IST
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மற்றும் திருத்தணி சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அங்கு ரூ.8 கோடி செலவில் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு நவீனப்படுத்தப்படும்.

தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த 8 விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்படும். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் ரூ.6.8 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
துணை வேளாண்மை விரிவாக்க நிலையங்களுக்குத் தேவையான புதிய கட்டிடங்கள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
