பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை.. 5 சீனர்கள் உடல் சிதறி கொடூரமாக பலி!

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு முகாமுக்கு சீன பொறியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படயை சேர்ந்த ஒருவர் மோதி அதை வெடிக்கச் செய்ததாகவும், வாகனத்தில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் மாகாண காவல்துறைத் தலைவர் முஹம்மது அலி கந்தாபூர் தெரிவித்தார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் பல ஆண்டுகளாக கைபர் பக்துன்க்வா பகுதியில் பாகிஸ்தான் தொழிலாளர்களுடன் சீன பொறியாளர்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தாசுவில் அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதை குறிவைத்து பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இன்று நடந்த தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பொறியாளர்கள் பலியாகினர்.தற்கொலைப்படயை சேர்ந்த நபரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு தாசுவில் நடந்த தாக்குதலில் 9 சீனர்கள் கொல்லப்பட்டனர்.சீனர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது தற்கொலைப்படை வீரர் ஒருவர் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது. ஆரம்பத்தில் இந்த சம்பவம் பஸ் விபத்து என சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது தற்கொலைப்படைத் தாக்குதல் என பின்னர் காவல்துறையால் உறுதி செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web