பெற்ற மகளின் முன்னே தாயின் கழுத்தை அறுத்து தானும் தற்கொலை!

 
தற்கொலை தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சியூட்டும் படுபயங்கரச் சம்பவம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சுன்வானி பகுதியைச் சேர்ந்த ரஜனி சுக்லா (37) என்ற பெண்மணி, தனது 17 வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்குள், ரஜனிக்கு ஏற்கனவே அறிமுகமான சுரேந்திர திவாரி என்ற நபர் இன்று அத்துமீறி வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

வீட்டிற்குள் நுழைந்த சுரேந்திர திவாரி, அந்தப் பெண்ணுடன் தேவையின்றி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்துள்ளார். இருவருக்கும் இடையேயான தகராறு முற்றவே, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சுரேந்திர திவாரி, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளை எடுத்து, பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த 17 வயது சிறுமியின் கண் முன்னேயே ரஜனியின் கழுத்தை மிகக் கொடூரமாக அறுத்துக் கொலை செய்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரஜனி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவத்தை நேரில் கண்டு உறைந்துபோன அந்தச் சிறுமி அலறியடித்துக் கூச்சலிட்டுள்ளார். பெண்ணைக் கொலை செய்த சில நிமிடங்களிலேயே, தான் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த குற்றவாளியான சுரேந்திர திவாரியும் அதே இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.