8 வருட காதல் ... காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம்... விடுதியில் பெண் பொறியாளர் தற்கொலை!

 
8

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கீர்த்தி என்ற மென்பொருள் பொறியாளர் மும்பையில் உள்ள விடுதியில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுமந்த் என்பவரைக் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக இருவரிடையே காதல் உறவு நீடித்து வந்த நிலையில் சாய் சுமந்துக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தன்னை உயிருக்கு உயிராகக் காதலித்த நபர் தனக்குச் செய்த இந்தத் துரோகத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த கீர்த்தி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார்.

திருப்பதி ஆம்புலன்ஸ்

காதலனின் திருமண ஏற்பாடுகள் குறித்துத் தெரிந்த பின்னர் வாழ்க்கையில் பெரும் விரக்தியடைந்த கீர்த்தி கடந்த ஜூலை 14-ம் தேதி மும்பை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் தனது குடும்பத்தினருக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. அதில் தனது இறுதிச்சடங்கைக் காதலனின் சொந்த ஊரிலேயே நடத்த வேண்டும் என்றும், தனது சடலத்திற்குத் தாலி கட்டிய பிறகே இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி போலீஸ்

நீண்டகாலக் காதல் உறவு துரோகத்தில் முடிந்து பெண் பொறியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இரு குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீர்த்தியின் இந்த அதிர்ச்சிகரமான தற்கொலை விவகாரம் குறித்துக் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். காதலனின் நம்பிக்கைத் துரோகத்தால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திரா மற்றும் மும்பை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.