சுகன்யா சம்ரித்தி யோஜனா : வட்டி விகிதம் 8 சதவிகிதமாக உயர்வு!!

 
ssa


சுகன்யா சம்ரித்தி யோஜானா திட்டம், அரசின் தற்போதைய மகள்களுக்கான சேமிப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கள் மகளின் பெயரில் சிறு சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இப்போது ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு நிதிப்பாதுகாப்பை வழங்க விரும்பினால், அவரது பெயரில் சுகன்யா சம்ரித்தி கணக்கைத் திறந்து, அவருக்காக லட்சக்கணக்கான ரூபாய் நிதியை உருவாக்கலாம்.

ssa
இத்திட்டம் தொடங்கியது முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு குடும்பம் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கான கணக்கைத் திறக்கலாம், இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று பெண்கள் பிறந்தால், இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறக்கலாம். இந்தத் திட்டம் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூபாய் 250ல் தொடங்கி அதிகபட்சமாக ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. கணக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படாவிட்டால், அது முதிர்வடையும் வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி கிடைக்கும் என்பதையும் புதிய விதிகள் குறிப்பிடுகின்றன. 

ssa
மார்ச் 31ம் தேதி வரை, இந்தத் திட்டத்தின் கீழ் 159,079 பெண்கள் கணக்குத் தொடங்கியுள்ளனர் அவர்களின் பெற்றோர். அப்பெண் 21 வயதை அடையும் போது அல்லது அவளது திருமணத்தின் போது கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வட்டியுடன் திரும்பப் பெறலாம். பெண் 18 வயதை அடைந்த பிறகு உயர் கல்விக்காக டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் வரை திரும்பப்பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது. இது தவிர, உங்கள் மகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு திருமணத்திற்கான பணத்தையும் எடுக்கலாம்

From around the web