பெரம்பலூரில் நாதக வேட்பாளர் திடீர் மாற்றம் - சுகன்யா போட்டி!

 
பெரம்பலூர் நாம் தமிழர் நாதக சுகன்யா பெரம்பலூர் நாம் தமிழர் நாதக சுகன்யா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை மாற்றியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது, அங்கு வந்த திமுக வேட்பாளருக்கு ஜான்சி ராணி வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி

மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொள்கை பிடிப்புள்ள தம்பிகளை உள்ளடக்கிய நாம் தமிழர் கட்சியில், எதிரணி வேட்பாளருக்கு வாழ்த்துச் சொன்னது 'ஒழுங்கு நடவடிக்கை'க்கு உட்பட்டதாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சீமான் தலைமையிலான தலைமைப் பொறுப்பாளர்கள் அவரை மாற்ற முடிவு செய்தனர்.

ஜான்சி ராணிக்கு மாற்றாக, தற்போது சுகன்யா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவைச் சுகன்யா சமர்ப்பித்தார். அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சீமான்

பெரம்பலூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக (விஜய் கட்சி) எனப் பலமுனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி எடுத்துள்ள இந்த அதிரடி மாற்றம் அந்தத் தொகுதியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.