தமிழகச் சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்!
தமிழகச் சட்டத்துறையின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான புதிய மைல்கல்லாகப் புதிய நியமனம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டத்துறையின் புதிய செயலாளராகப் ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய நியமனத்தின் மூலமாகத் தமிழகச் சட்டத்துறை வரலாற்றிலேயே அதன் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு
— மித்திரன் சதீஸ் (@SATISH122104) June 3, 2026
இது தான் மாற்றம்
சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்..!#CMJosephVijay #TVKVijay pic.twitter.com/jkjjU8iFye
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு
— மித்திரன் சதீஸ் (@SATISH122104) June 3, 2026
இது தான் மாற்றம்
சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்..!#CMJosephVijay #TVKVijay pic.twitter.com/jkjjU8iFye
சட்டத்துறையின் செயலாளராகக் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், கடந்த 31.05.2026 அன்று தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரின் ஓய்வைத் தொடர்ந்து காலியான இந்த முக்கியப் பதவிக்குத் தகுதியான புதிய அதிகாரியைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. அதன்படி மாநிலச் சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றி வந்த ப.சுமதி, புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் 02.06.2026 முதல் சட்டத்துறையின் புதிய செயலாளராகத் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணிகளைத் தொடங்கியுள்ளார். சட்டத்துறையின் மிக உயரிய பொறுப்புக்கு முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதனைப் படைத்துள்ள புதிய பெண் செயலாளர் ப.சுமதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
