கோடை விடுமுறை.. இன்று முதல் சென்னை - நெல்லை இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 
எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பயணம் செய்வோரின் வசதிக்காக இன்று முதல் நெல்லை - சென்னை இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06070) நெல்லையிலிருந்து சென்னைக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 16, 23, 30 (வியாழக்கிழமைகள்) ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரயில் அதிகாலை 4.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்.

எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் (06069): மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும். ஏப்ரல் 17, 24 மற்றும் மே 1 (வெள்ளிக்கிழமைகள்) ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் (06068): இதேபோல் நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன: ஏப்ரல் 13, 20, 27 (திங்கட்கிழமைகள்) ஆகிய தேதிகளில் இயக்கப்படும். நெல்லையிலிருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

ரயில்

திருச்சி - திருநெல்வேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில்: கூடுதல் வசதியாக, திருச்சியிலிருந்து நெல்லைக்கு இன்று ஏப்ரல் 12 மற்றும் 19 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் (06049) இயக்கப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே தங்களது பயணத்தைச் சீட்டுக்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்கள் மற்றும் சென்னையில் வசிக்கும் நெல்லை மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.