தகிக்கும் தமிழகம்... 11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 
வெயில் வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் மட்டுமன்றி ஈரோடு, திருச்சி, திருத்தணி, மதுரை மற்றும் பரமத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மீனம்பாக்கம், நாமக்கல், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் வெப்பம் சதமடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயில் வெப்பம் அக்னி

திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சை மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை மற்றும் பாளையங்கோட்டையிலும் அனல் காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோடை வெயிலின் தீவிரம் குறையாத நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

கடும் வெப்பம் காரணமாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. போதிய அளவு தண்ணீர் பருகவும், பருத்தி ஆடைகளை அணியவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.