10 இடங்களில் சதமடித்த வெயில்... மக்கள் கடும் அவதி!

 
வெயில் வெயில்

தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு மிகத் தீவிரமடைந்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டின் 10 முக்கிய இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் அதிகமான அளவில் பதிவாகியுள்ளதால், அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெயில் வெப்பம் அக்னி

 சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாகச் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் காரணமாகச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் பெருமளவு குறைந்து காணப்பட்டது.

 வெயிலே தெரியல... இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம்  நிறைவு!

மீனம்பாக்கத்தைத் தொடர்ந்து சென்னையின் மற்றொரு முக்கியப் பகுதியான நுங்கம்பாக்கத்திலும் வெயிலின் அளவு 101 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவாகியுள்ளது. கத்தரி வெயில் காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் வெயிலின் வேகம் குறையாமல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.