ஆதரவு கொடுங்க... சுந்தர் சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி... நெகிழ்ச்சி வீடியோ!

 
sundar c sundar c

புதிய நீதிக் கட்சியின் சார்பில் பிரபலத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது தொகுதி மக்களுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது“நான் முதல் முறையாக அரசியலுக்கு வந்துள்ளேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். திரையுலகில் இத்தனை காலம் எனக்குப் மிகப்பெரிய ஆதரவையும், வாழ்வாதாரத்தையும் அளித்த நீங்கள், எனது இந்தப் புதிய முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்ய வேண்டுகிறேன்.”

சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

திரைப்படத் துறையில் வணிக ரீதியான வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வரும் சுந்தர் சி, தற்போது தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மதுரையில் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மற்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் அவர் போட்டியிடுவது அவருக்குப் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள அவர், விரைவில் மதுரையில் முகாமிட உள்ளார்