சன்ரைசர்ஸ் சாதனை ...ஐபிஎல் வரலாற்றிலேயே முதன் முறையாக 10 ஓவர்களில் 148 ரன்கள்!

 
சன் ரைசர்ஸ்

 ஐபிஎல் போட்டிகளில் 8வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.  இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவினர்.   இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.  டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

சன் ரைசர்ஸ்
டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை கலங்க வைத்து 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வரலாற்றில் இதுவே அதிவேக அரைசதம்  இந்த சாதனையை ட்ராவிஸ் ஹெட் செய்து முடித்த 22 நிமிடங்களில் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.இருவரும் போட்டி போட்டு சிக்ஸ், ஃபோர் அடித்து விளாசித் தள்ளினர்.  
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 10 ஓவர்களில் 148 ரன்கள் என்ற சாதனையை படைத்துள்ளது  சன்ரைசஸ் ஹைதராபாத் அணி.இந்நிலையில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து அபார இலக்கை எட்டியது.  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.  

சன் ரைசர்ஸ்
மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்களும்  ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.  அடுத்து வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணைந்து  86 ரன்கள் அடித்தனர். இதில்  நமன் திர் 30 ரன்களும், திலக் வர்மா  64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவரை தொடர்ந்து வந்த கேப்டன்  பாண்டியா 2 ரன்களுக்கு பிறகு திணறினார்.  இவருடைய இணை டிம் டேவிட்  42 ரன்கள் எடுத்தார்.  ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்த நிலையில்  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து மும்பை அணி தோல்வியை தழுவியது.  இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் அடித்த  அபிஷேக் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web