சூப்பர்... சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில்!
சென்னையின் புறநகர்ப்பகுதிகளை மாநகரத்துடன் இணைப்பதில் பொதுப்போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முதலிடத்தில் இருந்து வருகின்றன. இதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பயணிகளின் தேவைகள், வசதி அடிப்படையில் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணி நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடா்ந்து ரயில் இயக்கம் குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ” முழுவதும் ஏசி வகுப்பு பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், நடப்பு நிதியாண்டு தெற்கு ரயில்வேக்கு ஒரு ரயில் வழங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ரயில் தயாரிப்பு பணி முடிவடைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
